மேஷம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உங்களைப்பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். போராட்டமான நாள்.
ரிஷபம்:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மிதுனம்:
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
கடகம்:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப் பால் உயரும் நாள்.
கன்னி:
கம்பீரமாக பேசி சில காரியங் களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர் பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூ லாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து விலகும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.
தனுசு:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.
கும்பம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். உற்சாகமான நாள்.
மீனம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப் பார். நிம்மதியான நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget