மேஷம்:

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்:

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோ சனையை ஏற்பர். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் திருப்பம் ஏற்படும். நாள்.

மிதுனம் :

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

கடகம்:

கடகம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் அதிகரிக்கும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் களால் வீண் டென்ஷன், செலவுகள் வந்துப் போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: பெற்றோர் ஒத்துழைப்பார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: பிரச்சனைகளின் ஆனிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும் பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங் கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget