மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: நீண்ட நாட்களாக தள்ளிப்போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். சகோதரர் பாசமழை பொழிவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சாதிக்கும் நாள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
கடகம்
கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் பாராட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
துலாம்
துலாம்: மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வேலைச் சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக் கும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மகரம்
மகரம்: கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன் யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
மீனம்
மீனம்: மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தி யமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.