இந்தியாவைபொறுத்தவரை எந்த அரசியல் பிரச்னை என்றாலும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். எல்லா பாரத்தையும் தாங்கும் சுமைதாங்கி கல் பொதுஜனம். இப்போது பந்த் மிரட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஏழு கூட்டணிக் கட்சிகள் ஜூலை 5ல் பந்த் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிளுக்கு எதிர்ப்பை காட்டும் வடிவமாக பந்த் உள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்சிகள் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. பந்த் வெற்றி, அதன் தொடர்ச்சியான அரசியல் வளர்ச்சி இவை மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரியும்.
முழு அடைப்பு நாளில் பல்வேறு விதங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பந்த்தை பார்த்து அலுத்த மாநிலம் நமது பக்கத்தில் உள்ள கேரளம். அடிக்கடி நடக்கும் பந்த்துக்கு பழகிப்போய், யார் அழைப்பு விடுத்தாலும் கடையை பூட்டி விடும் நிலைமை. சட்டசபையில் ஒரு சீட் கூட இல்லாத பாரதிய ஜனதா பந்த் என்று சொன்னாலும் அங்கே மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து விடும்.
விளைவு, அங்கே பந்த்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது. ஆனாலும் என்ன? பந்த் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. பெயர் மட்டும் ‘ஹர்த்தால்’ என்று இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜூன் 25 நள்ளிரவு அமலுக்கு வந்தது. அடுத்த நாள் காலை கேரளாவில் முழு அடைப்பும் மேற்கு வங்கத்தில் 24 மணி நேர போக்குவரத்து ஸ்டிரைக்கும் நடந்தது. முன்னறிவுப்பு ஏதுமின்றி திடுதிப்பென்று நடந்த இந்த ஸ்டிரைக்கால் மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு, பள்ளிகளுக்கு திடீர் லீவ், வாகனங்கள் ஓடாததால் வெளியூர் பயணிகள் தெருவில் திண்டாட்டம், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு என மாநிலத்தின் சகஜ வாழ்வு குலைந்து போனது.
5ம் தேதி பந்த்தில் யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பந்த் நடத்துவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, நஷ்டம்தான். ஆனாலும் இந்த சடங்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு உருப்படியான ஒரு தீர்வு காண வேண்டும்.
அண்ணே!
வால்பையன் என்று பெயர் வைத்திருப்பதால் உங்களை அனைவரும் என் போலி என்கிறார்கள், கஷ்டமா இருக்கு, பெயர் மாற்ற உத்தேசிக்கலாமே!