மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், காரியத் தடை நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
சிம்மம்:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
கன்னி:
சகோதர வகையில் நன்மை உண்டு. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்:
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மகிழ்ச்சி தங்கும் நாள்.
தனுசு:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
மகரம்:
எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனம் பழுதாகும். கடன் தொந்தரவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
கும்பம்:
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு, மரியாதைக் கூடும் நாள்.
மீனம்:
கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.