நேற்று இறுதியில் ரூபாய் மதிப்பு 05 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.44.38 பைசாவாக முடிவுற்றது.
நேற்று இறுதியில் ரூபாய் மதிப்பு 05 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.44.38 பைசாவாக முடிவுற்றது.
துபாயில் இருந்து 350 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இ.கே. & 530 போயிங் விமானம், துபாயில் இருந்து 350 பயணிகளுடன் நேற்று காலை கொச்சிக்கு வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50க்கு பறந்து கொண்டு இருந்தபோது அந்த பாதையில் ஏற்பட்டு இருந்த காற்று வெற்றிடத்தில் விமானம் சிக்கியது. இதனால், விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியாமல் போனது. திடீரென கீழ் நோக்கி 1,500 அடி வரை தலைகீழாக பாய்ந்தது.
அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால், விமானத்தில் கீழே விழுந்து உருண்டனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போவதாக நினைத்து பீதியில் பயணிகள் அலறினர். 33,500 அடிக்கு கீழ் காற்று வெற்றிடம் இல்லாமல் இருந்தது. இதனால், விமானம் அந்த இடத்துக்கு வந்ததும் சீராக பறக்கத் தொடங்கியது. இதனால், மிகப் பெரிய விபத்தில் இருந்து அது தப்பியது.
விமானத்துக்குள் உருண்டதால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். எல்லா பயணிகளும் பீதியில் உறைந்து கிடந்தனர். விமானம் சகஜ நிலைக்கு வந்ததும் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டு, நடுவானில் நடந்த விபரீதம் பற்றி கூறி, அவசரமாக தரையிறங்க வேண்டும் என்றார். உடனே, மருத்துவக் குழுக்கள் அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானம் பத்திரமாக தரை இறங்கியதும் காயம் அடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நடுவானில் ஏற்படக் கூடிய காற்று வெற்றிடத்தை ரேடார்களாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக விமான நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு அதிக நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏற்பட்டிருக்கும். அதுபோன்றவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையும் கூடும்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
பேய், பிசாசு, ஆவி.. இதெல்லாம் பயத்தின் அடிப்படையில் மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிற பீதிகள். நிஜமாகவே மனிதனுக்கு மிரட்டலாக இருப்பது இயற்கை சக்திகள்தான். சமீபத்தில் மனித குலத்துக்கு செக் வைத்திருக்கும் தம்மாத்தூண்டு இயற்கைச் சீற்றம் ஐஸ்லாந்து எரிமலை. டன் கணக்கில் தூசியையும் புகையையும் கக்கி சைலன்டாக அது தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க, அதன் தூசுக்கு பயந்து 15 ஆயிரம் விமானங்கள் ‘நங்கூரம் பாய்ச்சி’ நின்றுவிட்டன.
எரிமலை குழம்பு பொங்கிப் பாய்வதால் ஐஸ்லாந்தில் உள்ள பனி உருகி வெந்நீராகி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது என செய்திகள் கூறுகின்றன. எரிமலையின் விளைவுகள் இவை மட்டும்தானா? இன்னும் உண்டா?
இந்த கேள்விக்கு விடை 2 நூற்றாண்டுகளுக்கு முன் உலக வரலாற்றில் இருக்கிறது. இதைவிட பல மடங்கு பயங்கரமான தம்போவா என்ற எரிமலை கடந்த 1815&ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சம்பவா தீவில் வெடித்தது. அந்த எரிமலை கக்கிய புகை மண்டலம் எங்கும் பரவி பூமியில் சூரிய ஒளி விழுவதை தடுக்கத் தொடங்கியது. 1,630 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பயங்கர எரிமலை வெடிப்பாக இது கருதப்பட்டது.
1812&ல் கரீபியன் தீவுகளில் உள்ள லா சோபிராரி எரிமலை, அதே ஆண்டில் இந்தோனேஷியாவின் ஷாங்கி தீவில் உள்ள அவு எரிமலை, 1813&ல் ஜப்பானில் உள்ள சுவனோசெஜிமா எரிமலை, 1814&ல் பிலிப்பைன்ஸில் உள்ள மேயன் எரிமலை ஆகியவையும் சீற்றத்துடன் வெடித்து நெருப்புக் குழம்பை கக்கின. ஏற்கனவே இந்த எரிமலைகள் வளிமண்டலத்தில் புகை மண்டலத்தை ஏற்படுத்திய நிலையில், தம்போவா வெடித்ததில் உலகின் தட்பவெப்ப சுழற்சியே நிலைகுலைந்து போனது. எரிமலை புகையில் இருக்கும் கந்தக அமில துளிகள் (நீர்த்துளியைவிட நுண்ணியவை) சூரிய ஒளியை தடுத்தன. சூரிய வெப்பம் குறைந்ததால் பூமியில் குளிர் அதிகரித்தது. காற்று மண்டலத்தின் மேல்பகுதியில் உருவான சல்பர் கூட்டுப்பொருட்களான ஏரோசால் போன்றவை 4 ஆண்டுகள் வரை நிலைத்திருந்து தனது பயங்கர விளைவை பூமியில் காட்டின. சூரிய ஒளியின்றி பயிர்கள் கருகின. உணவின்றி உயிரினங்கள் மடிந்தன. பஞ்சம், பட்டினி போல கொள்ளை நோய்களும் வேகமாக பரவின.
தட்பவெப்பத்தில் ஏற்பட்ட கோளாறு வடகிழக்கு அமெரிக்கா, கனடா, வடக்கு ஐரோப்பா, இத்தாலி, சீனா, ஜப்பான் என உலகின் பல பகுதிகளையும் பாதித்தது. பகல், இரவு என இரு வேளையும் சராசரியாக 20 & 25 டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது. பல இடங்களில் கோடையிலும் பனி கொட்டிய அதிசயம் நடந்தது. வளிமண்டலத்தில் இருந்த எரிமலை புகை மேகத்தில் கரைந்து இத்தாலியில் ரத்தச் சிகப்பு நிறத்தில் உறைபனி பொழிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கோடை காலமே வரவில்லை. வெயிலே அடிக்காமல் காலம்மாறி பெய்த மழை இந்தியாவின் கங்கை கரை பகுதிகளில் காலரா போன்ற கொள்ளை நோய்களை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது.
அதற்குப் பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எரிமலைகள் சீறினாலும் 19&ம் நூற்றாண்டு போல பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. 2010&ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பூமி அடிக்கடி சிலிர்த்துக்கொள்கிறது. ஹைதி, இந்தோனேஷியா, சீனா, ஆப்கன் நிலநடுக்கங்களை தொடர்ந்து தற்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இது சற்று பீதியை ஏற்படுத்தி விமான சேவைகளை ஸ்தம்பிக்க வைத்தது. இதுவும் பொங்கி வெடிக்குமா, சமர்த்தாய் அடங்கிவிடுமா என்பது தெரியவில்லை.
அழிவா, வளர்ச்சியா?
சுமார் 71 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அமைந்துள்ள பகுதியில் பயங்கர எரிமலை வெடித்தது. கந்தக துகள்கள் வான் முழுவதும் பரவியதில் சூரிய ஒளி முழுவதுமாக மறைந்து உலகமே இருளடைந்தது. பூமி வெப்பநிலை 1 டிகிரி செல்சியசுக்கும் கீழே வந்தது. உலகமே ஐஸ்கட்டியாக உறைந்தது. குளிர் தாங்காமல் பல்லாயிரம் உயிரினங்கள் பூண்டோடு அழிந்தன. அதற்கு பிறகு பல புதிய உயிரினங்கள் தோன்றின. மனிதகுலத்திலும் மாபெரும் பரிணாம வளர்ச்சி அப்போது ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தம்போவா எரிமலையின் மாபெரும் சீற்றத்தின்போது விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ் பகுதி மக்கள் உணவைத் தேடி அகதிகளாக வெகு தூரம் பயணித்தனர். ஜெர்மெனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலை ஏற்பட்டது. ஐரோப்பாவை சேர்ந்த பலர் அமெரிக்காவின் மத்திய பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்து புதிய குடியிருப்புகளை உருவாக்கினர். அப்போது போக்குவரத்துக்கு பயன்பட்ட குதிரைகளுக்கு உணவளிக்க முடியாததால் மனிதன் மாற்றுவழியை சிந்திக்க தொடங்கினான். இதன் விளைவாக ‘டேண்டி ஹார்ஸ்’ என்ற புதிய வாகனத்தை ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வான் டிரெய்ஸ் உருவாக்கினார். அதுதான் பின்னாளில் ‘சைக்கிளாக’ மாறியது.
ஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் அருகே தைவான் நாடு உள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டன.
எனவே பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி யுள்ளது. இது தைவான் மற்றும் பிலிப் பைன்ஸ் நாட்டின் பாடன் தீவுகளின் வட பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வேதுறை அறிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தினால் தைவானில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் 3வது ஐ.பி.எல். தொடரில் சோபிக்கவில்லை. அவர் இடம் பெற்றிருந்த பஞ்சாப் அணி படுதோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்தது. 14 ஆட்டத்தில் யுவராஜ்சிங் வெறும் 255 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசில் வரும் 30&ம்தேதி துவங்கும் உலககோப்பை 20&20 தொடரில் அசத்துவேன் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் சோபிக்காதது வருத்தமளிக்கிறது. மணிக்கட்டு காயத்திலிருந்து மீண்ட நான் உடனடியாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றது நெருக்கடியாக அமைந்தது. இதனால் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. தற்போது எனது கவனம் முழுவதும் 20&20 உலக கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது.
பீல்டிங் முக்கிய பங்குவகிக்கும் என்பதால் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி பெரிதளவில் சாதிக்கவில்லை.
இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சேவாக் இல்லாதது பின்னடைவுதான். இருப்பினும் மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள முரளி விஜய் நம்பிக்கை அளிப்பார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது. மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் பூவா தலையான வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.இதன்படி முரளி விஜயும், மேத்யூ ஹைடனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 8வது ஓவரில் விஜய் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் 2 சிக்சர், பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த ஓவரில் ஹைடனும் ஆட்டம் இழந்தார்.அடுத்து ஆடவந்த தமிழக வீரர் பத்ரிநாத் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். 12 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 68 ரன்களே எடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் காணப்பட்டது.இந்த சூழலில் சுரேஷ் ரெய்னாவும், தோனியும் ஜோடி சேர்ந்தனர். அணியின் நிலைமையை உணர்ந்து ரெய்னா நாலாபுறமும் பந்துகளை விரட்டியடித்தார். சிக்சர்களும் பறந்தன. அவரது அதிரடியால் ஆட்டத்தில் சூடுபிடித்தது. சென்னை அணியின் ரன் வேகமும் மளமளவென உயர்ந்தது. ஸ்கோர் 139 ரன்களை எட்டிய போது, தோனி 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.தொடர்ந்து இறங்கிய அல்பி மோர்கல் தனது பங்குக்கு 15 ரன்கள் அணிக்கு பெற்றுத்தந்தார். இதற்கிடையே அரைசதத்தை கடந்த சுரேஷ் ரெய்னா கடைசி வரை களத்தில் நின்று சென்னை அணி சவாலான ஸ்கோரை எட்ட துணையாக நின்றார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 35 பந்தில் 57 ரன்கள் குவித்த ரெய்னா 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ஷிகர் தவானும், சச்சின் டெண்டுல்கரும் களம் புகுந்தனர். தவான் ரன் ஏதுமின்றி போலிஞ்சர் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் டெண்டுல்கரும், அபிஷேக் நாயரும் இணைந்தனர்.சென்னை அணியின் பவுலிங் தாக்குதலில் மும்பை அணியின் ஸ்கோர் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது. விரல் காயத்தையும் பொறுத்துக் கொண்டு களம் இறங்கிய தெண்டுல்கர் வழக்கம் போல் நேர்த்தியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 67 ரன்களாக உயர்ந்த போது, நாயர் 27 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்பஜன்சிங்கும் (1) அதே ஓவரில் வீழ்ந்தார்.இதை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் ஜகாதி ஒரே ஓவரில் இரட்டை விக்கெட்டை கைப்பற்றி மும்பையை நெருக்கடிக்குள் தள்ளினார். டெண்டுல்கர் 48 ரன்களிலும், சவுரப் திவாரி ரன் ஏதுமின்றியும் கேட்ச் ஆனார்கள். டுமினியும் வந்த வேகத்தில் நடையை கட்டினாலும், அதிரடி சூரர் பொல்லார்ட் களம் புகுந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு உருவானது. அதிரடியாக ஆடிய அவர் 10 பந்தில் 27 ரன்களில் ஆட்டம் இழந்ததும், ஆட்டம் முழுமையாக சென்னை வசம் ஆனது.கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்ட போது, மும்பை அணியால் 4 ரன்களே எடுக்க முடிந்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முதலாவது ஐ.பி.எல்-லில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. முதலாவது ஐ.பி.எல். கோப்பையை (2008ஆம் ஆண்டு) வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது கோப்பையை (2009) கில்கிறிஸ்ட் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.20 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5,324.30 ஆக உயர்ந்தது.
மிட்கேப் 47.55, சுமால்கேப் 73.94, பிஎஸ்இ-500 36.82 புள்ளிகள் அதிகரித்தன.
காலை 9.40 மணியளவில் 1582 பங்குகளின் விலை அதிகரித்தது. 614 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலை மாற்றமில்லை.
காலையில் உலோகம், வங்கி, பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. பெட்ரோலியம், மருத்துவ துறை பிரிவு குறைந்து இருந்தது.
பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் காரணமாக நிலநடுக்க மையத்தில் சிக்கிய கன்செப்சியான் நகரம் மேற்கு நோக்கி 10 அடி நகர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தென் அமெரிக்க நிலப்பகுதி சுமார் ஒரு அங்குலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பு இருந்த நிலைக்கும், நிலநடுக்கத்திற்கு பிறகு உள்ள நிலைக்கும் உள்ள வேறுபாடு செயற்கைக் கோள் படங்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜி.பி.எஸ். என்ற குளோபல் பொசிஷனிங் சாட்டிலைட் தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்யப்பட்ட முதல் நிலநடுக்க விளைவு இது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி தென் அமெரிக்க கண்ட நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு பெருமள்:வு நகர்ந்துள்ளது. சிலி தலைநகர் சாண்டியாகோ மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி 11 அங்குலம் நகர்ந்துள்ளது.கன்செப்சியான் நகருக்கு வடகிழக்கேயுள்ள வல்பரைஸோ, மென்டோசா ஆகிய நகரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் நகர்ந்துள்ளது.ஓஹியோ பலகலைக் கழக பேராசிரியர் மைக் பெல்விஸ் என்பவர் நிலநடுக்கத்திற்கு பிறகான புவி நிகழ்வுகளை 1993ஆம் ஆண்டு முதல் ஆராய்ந்து வருகிறார். தற்போதைய தொழில்நுட்ப உதவிகளுடன் நிலநடுக்கம் மட்டுமல்லாது, அது குறித்த பல்வேறு தரவுகளையும் பெற முடியும் என்று மைக் பெல்விஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்
புவி வெப்பமடைதலால் கடல்களின் சில பகுதிகளில் நீர் உவர்மயமாகிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் இத்தகைய ஆய்வில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக கடலின் மேற்பரப்பு நீர் மட்டுமல்லாது, அடியாழ நீரும் உப்புமயமாகி வருகிறது என்று கண்டுபிடித்துள்ள இந்த ஆய்வுக்குழுவினர், இது புவி வெப்பமடைதலால் ஏற்படும் மாற்றம் என்று தெரிவித்துள்ளனர்.கடல் நீரின் உவர்த் தன்மை பூமியில் பொழியும் மழையின் அளவு மற்றும் ஆவியாதல் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிதீவிர வானிலை மாற்றங்கள் கடலின் சிலபகுதிகளை உவர் மயமாகவும் மற்றும் சில பகுதிகளில் நீரை உவரற்றதாகவும் செய்து வருகிறது என்று பால் டியூரக் என்ற ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.கடலின் ஒரு பகுதியில் நீர் அதிகமாக ஆவியாகிறது என்றால் அப்பகுதியில் உப்புமயமாகிறது. ஆனால் அதிக மழை உள்ள பகுதிகளில் நீரின் உப்புத் தன்மைகுறைந்து அது சாதாரண நீராக மாறி வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.கடல் நீரின் மேற்பரப்பு உவர் மயமாகும் சாத்தியம் மேலும் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெப்பப் பகுதிகளில் உள்ள அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் நீர் மேலும் உவர்மயமாகும் சாத்தியங்கள் தென் படுகிறது என்று கூறும் இந்த ஆய்வு மழை அதிகம் பொழியும் பகுதிகளில் கடல் நீர் தெளிவான நீராக மாறுகிறது என்று கூறுகின்றனர்.இதில் மர்மம் என்னவெனில் கடலின் மேற்பரப்பு நீர் அதிகம் ஆவியாவதால் அப்பகுதி நீர் உவர் மயமாவதில் ஒரு தர்க்க ரீதியான காரணம் உள்ளது. ஆனால் கடலின் அடியாழப்பகுதிகளில் உள்ள நீரும் உவர் மயமாகிவருவது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை என்று டிஸ்கவரி சானல் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி இதர நாடுகளுக்கு உதவுவதாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.வாஷிங்டனில் உலக வங்கியின் புதிய அறிக்கையை இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசுகையில் இதனை தெரிவித்த அந்த அறிக்கையை எழுதிய டெல்ஃபின், மேலும் கூறியதாவது: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிக்கு தடையாக அமைந்துவிட்டது. ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அபார வளர்ச்சியால் 2015 க்குள் வறுமையை ஒழிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகம், சூதாட்டம், மேட்ச் பிக்சிங், ஏல மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம், மும்பையில் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் லலித் மோடி மீதான நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அணிகளை ஏலம் விட்டதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஐபிஎல் சர்ச்சையை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ஐபிஎல் மோசடி குறித்து கம்பெனிகள் விவகாரத்துறை, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் 24 மணி நேரத்துக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என கம்பெனி விவகாரங்கள் துறை கெடு விதித்தது. அணி உரிமையாளர்களின் அலுவலகங்கள், ஐபிஎல் கமிஷனர் அலுவலகம் மற்றும் பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஐபிஎல் அலுவலகத்தில் சோதனை செய்தபோது, வீடியோகான் மற்றும் அடானி குழுமத்தினர் அளித்திருந்த ஏல ஆவணங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய அரசின் 3 துறையினரும் விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன. ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்திருக்கலாம் எனவும் 26 வீரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அண்மையில் கொச்சி மற்றும் புனே அணிகளுக்காக சென்னையில் நடந்த ஏலத்தில் மட்டும் அல்லாது, முதல்முறையாக 2008&ம் ஆண்டு நடந்த 8 அணிகளின் ஏலத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008&ம் நடைபெற்ற ஏலத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போயின. இந்த இரண்டு அணிகளிலும் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியின் உறவினருக்கு பங்கு இருக்கிறது. இதேபோல் மிகக் குறைந்த வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்கியுள்ளார். இவற்றில் மோடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
மற்ற அணிகள் ஏல விஷயத்திலும், அணி உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ஏலத்தை குறைத்து கேட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கார்டெல் அமைத்து ஏலம் கேட்பது மத்திய அரசின் காம்படிஷன் ஆக்ட் 2002&ன் படி குற்றமாகும். இந்தக் கோணத்தில் விசாரணை நடத்த மத்திய அரசின் காம்படிஷன் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் அணிகளில் டெக்கான் சார்ஜர்ஜ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய ஒரு சில அணிகள் தவிர மற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கு 60 சதவீத பங்குகளே சொந்தம் என்றும், மீதமுள்ள 40 சதவீத பங்குகள் நிழல் நிறுவனங்களுக்கு சொந்தம் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் வெளிநாடுகளில் பதுக்கப்பட் டிருக்கும் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இதன்மூலம் மோடிக்கு பெருத்த ஆதாயம் கிடைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மற்ற சர்ச்சைகளில் அதிக கவனம் செலுத்தாமல், ஏல மோசடிகளில் தீவிர கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சர்ச்சையை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடுவது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது. இந்த சர்ச்சை குறித்து பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பி வருவதால் நாடாளுமன்ற குழு அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மும்பையில் நாளை மறுநாள் (26&ம் தேதி) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், ஐபிஎல் கமிஷனர் பதவியில் இருந்து மோடி நீக்கப்படுவது உறுதி என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தை 5 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என லலித்மோடி முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை என்றும் பிசிசிஐ முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்திருந்த மோடி, அதிலிருந்து பின்வாங்கியுள்ளார். பிசிசிஐக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிசிசிஐக்கும் லலித்மோடிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லலித் மோடிக்கு பதிலாக பிசிசிஐ தலைவர் மனோகர், ஐபிஎல்லின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும், லலித் மோடி தொடர்ந்து பிசிசிஐ துணைத் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அணிகள் ஏலத்தில் பல கோடி மோசடி
விசாரணை நடத்த மத்திய அரசு தீவிரம்





.jpg)


