TRADING LIVE TIPS VISIT MY BLOG : www.tradersfirst.blogspot.com
நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன்கள் (என்பிஏ) ரூ.1 லட்சம் கோடியைத்தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகடந்தநிதியாண்டைவிட
இரண்டு மடங்கு அதிகம்.கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெக்ஸ்டைல்ஸ் துறை வெளிநாட்டு ஆர்டர்களை பெருமளவில் நம்பி உள்ளன. இவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளன.
இதுதவிர, ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ், விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானமும் நடப்பு நிதியாண்டில் குறையும். இதனால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டு வசூலாகாத கடன்கள் அதிகரிக்கும் என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டு மடங்காகி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும்.
கடந்த நிதியாண்டில் வசூலாகாத கடனை வசூலிக்க ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வங்கிகள் ஏலம் விட்டன. ஆனால், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ஏஆர்சி) ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே ஏலம் எடுத்தன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணம்.எனவே, சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களில் 49 சதவீதமாக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


28.5.2010,

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 14ம் நாள், வெள்ளிக்கிழமை,
தேய்பிறை. பிரதமை திதி மறுநாள் விடியற்காலை மணி 5.33 வரை; பிறகு, துவியை திதி. சித்தயோகமுடைய அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 1.13 வரை; பிறகு, மரணயோகமுடைய கேட்டை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சமநோக்கு நாள். அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி.
நல்ல நேரம்:
காலை மணி 6&9, மதியம் 1&3, மாலை 5&6, இரவு 8&10 மணி வரை.
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
சந்திராஷ்டமம்: பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
பொதுப்பலன்:
கடன் பைசல் செய்ய நன்று.


 INDIA'S FIRST REAL TIME (every 30 minutes) TRADING TIPS VISIT MY BLOG: tradersfirst.blogspot.com
சர்வதேச பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலை பெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் காரணமாக, நேற்று வர்த்தகம் தொடங்கும்போதே சென்செக்ஸ் உயர்வுடன் இருந்தது. பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்து பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கின. இதையடுத்து, வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 4,917 புள்ளிகளில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிக்கும் 30 நிறுவன பங்குகளில் 24 உயர்வுடன் முடிந்தன. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3.48 சதவீதம் உயர்ந்தன. ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் வருமானம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஐடி துறை பங்குகளின் உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம். அடுத்தபடியாக உலோக துறை பங்குகள் 2.98 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிப்பதில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.08 சதவீதமும் இரண்டாம் இடத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 3.37 சதவீதமும் உயர்ந்தன.
இன்றும் பங்கு சந்தைகள் 2 % வரை உயர்வை கண்டன.கடந்த ஒருவாரமாக முதலிட்டார்கள் இடையில் நிலவி வந்த பயம் நீங்கி நம்பிக்கை பிறந்தது.



கூகுள் நிறுவனத்தின் பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் விளையாட்டால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 50 லட்சம் மணி நேரம் வீணாகிப்போனது. பொருளாதாரத்துக்கு ரூ.570 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம், கூகுள் சர்ச் இன்ஜின் அருகே, கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் வடிவத்தில் இந்த கம்ப்யூட்டர் கேமையும் போட்டிருந்தது. சர்ச் இன்ஜினில் தேட வந்தவர்கள் அனைவரும் பேக் மேன் கேமை பார்த்ததும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். 48 மணி நேரம் வரை இந்த கூகுள் லோகோ பேக் மேன் கேம் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 50.5 கோடிப் பேர் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானாவர்கள் கூகுள் லோகோ பேக் மேன் கேமை பார்த்ததும் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 48 லட்சத்து 19 ஆயிரம் மணி நேரம் வீணாகிப் போனது. அலுவலக பணி நேரத்தில் விளையாடியதால் ரூ.570 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக ரெஸ்க்யூ டைம் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இத்தனை கோடி பணத்துக்கு கூகுள் நிறுவனர்களான லாரி, செர்ஜி மற்றும் அங்கு பணிபுரியும் 19,385 ஊழியர்களையும் 6 வாரங்களுக்கு வேலைக்கு அமர்த்தலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேக் மேன் கேமுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அசந்து விட்டோம். இதனால் கூகுள் டாட் காமில் இந்த கேமை நிரந்தரமாக விளையாட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் கூகுள் நிறுவன துணைத் தலைவர் மரிஸா மேயர்.


 
 காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் நேற்றிரவு 8 மணியளவில் முழுவதுமாக அடியோடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பஞ்ச பூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். திருப்பதியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இக்கோயிலில் ராகு, கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் ராஜ கோபுரம் 140 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துவந்தது. கி.பி. 1510ம் ஆண்டு கிருஷ்ண தேவராய மன்னர் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்தை கட்டியதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜகோபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது திடீரென ராஜகோபுரத்தின் மேல் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை கோபுரத்தின் இடதுபுறம் இரண்டாக விரிசல் ஏற்பட்டு பிள வுபட்டது போல் காணப்பட்டது. 
மின்னல் வெட்டு போல் காணப்பட்ட இந்த இடத்திலிருந்து செங்கற்கள், சுண்ணாம்பு கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ராஜகோபுரம் முழுவதும் நேற்றுறிரவு இடிந்து விழுந்தது.


 
 
 
 
 
எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது தெ.கொ. இது அபாண்டம் என வ.கொ. மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.


 
 மேஷம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 
ரிஷபம்:
சாவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
மிதுனம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கடகம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி வெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
சிம்மம்:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
கன்னி:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
 
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
 
கும்பம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.
 
மீனம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த வாக்குவாதம், காரியத்தடை யாவும் நீங்கும். கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.



27.05.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 13ம் நாள், வியாழக்கிழமை,
வளர்பிறை. பௌர்ணமி திதி மறுநாள் விடியற்காலை மணி 5.34 வரை; பிறகு தேய்பிறை பிரதமை திதி. கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 12.53 வரை; பிறகு, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். வைகாசி விசாகம், திருவண்ணாமலை கிரிவலம்.
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை. 
ராகுகாலம்: 1.30 to 3.00
எமகண்டம் :6.00 to 7.௩௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண்வாக்கு வாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப்பலன்:
புது வேலைக்கு விண்ணப்பிக்க, அரசு அதிகாரிகளை சந்தித்து உதவி பெற நன்று. 
இன்று விசாக நட்சத்திரம்.முருகன் கோவில் சென்று வழிபடலாம்.


பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் முழு திருப்தியை ஆண்களுக்கு அளிக்க அறிமுகமான வயாகரா என்ற நீல நிற மாத்திரை போலவே, பெண்களுக்கும் வரப்போகிறது ஒரு வயாகரா பாணி மாத்திரை. இந்த மாத்திரை பிங்க் கலரில் இருக்கும்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மருந்துக்கம்பெனி, இந்த மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையின் பெயர் ‘பில்பன்சரின்’ என்பது. பாலியல் உறவில் முழு திருப்தியை அளிக்க உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்த வல்ல இந்த மாத்திரை, பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு விட்டன. சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், இந்த மாத்திரை சாப்பிட்டதும், ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் போது சிறிதளவு கூட தொய்வே ஏற்படவில்லை, முழு திருப்தி அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
    ஆண்களின் வயாகரா போல பெண்களுக்கு ஒரு வயாகரா மாத்திரையாக இது அறிமுகமாக உள்ளது. இந்த மாத்திரையை தயாரித்து விட்டாலும், அதற்கு, அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற வேண்டும். அப்போது தான், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய முடியும்.
ஜெர்மனியில் போரிங்கர் இங்ஹெய்ம் என்பது பிரபல மருந்து கம்பெனி. இது தான் பெண்களுக்கான வயாகரா மாத்திரையை ‘பில்பன்சரின்’ என்ற பெயரில் உருவாக்கி, சோதனைகளை செய்து நிரூபித்தும் காட்டியுள்ளது.
ஆண்களுக்கான வயாகரா மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பிஷர் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் இதைப் பயன்படுத்தலாம்’ என்று கூறியது.
ஆனால், அமெரிக்க கட்டுப்பாட்டு துறை அனுமதிக்கவில்லை.
‘பெண்களுக்கு உடல் பிரச்னைகள் உள்ளன. ஆண்களை போல, அவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட முடியாது; அப்படி சாப்பிட்டால், பெரும் கோளாறுகளுக்கு வழிவகுத்து விடும்; அதனால் தான் பெண்கள் விஷயத்தில் பாலியல் தொடர்பான மாத்திரைகளை, மருந்துகள் அனுமதிப்பதில் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது’ என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை கூறி விட்டது..
சோர்வை நீக்கும் மாத்திரையாகத்தான் முதலில் ஜெர்மனி நிறுவனம் ‘பில்பன்சரின்’ மாத்திரையை தயாரித்தது; இதை மாற்றி, இப்போது பெண்களுக்கான வயாகரா போல வடிவமைத்துள்ளது.
இந்த மாத்திரைக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி விட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பார்த்து விடலாம் என்று ஜெர்மனி நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதுபோலவே, வேறு நிறுவனங்களும் பெண்களுக்கான வயாகராக்களை புதுப்புது பெயர்களில் விற்பனைக்கு விட தயாராக உள்ளன


SHARE TRADING LIVE TIPS VISIT MY BLOG:www.tradersfirst.blogspot.com
ஸ்பெயினில் திவாலான வங்கிக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கப் போவதாக தகவல் வெளியானதால், உலக பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. இதன் எதிரொலியாக, சென்செக்ஸ் 447 புள்ளிகள் சரிந்து 16,022ல் நிலைத்தது. இதன்மூலம் மூன்றரை மாதத்துக்கு முந்தைய நிலையை அடைந்தது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஸ்பெயின் நாட்டின் கஜாசர் வங்கி திவால் ஆனதாகவும், அதற்கு அந்நாட்டு சென்ட்ரல் வங்கி நிதியுதவி அளிக்கும் என்றும் நேற்று தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியதால் இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே தொடங்கின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை மளமளவென விற்றதால் சரிவு நாள் முழுவதும் நீடித்தது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் சரிவுக்கு மற்றொரு காரணம். வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் 16,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழ் இறங்கியது.
குறைந்தபட்சமாக 15,960 புள்ளிகள் வரை இறங்கிய சென்செக்ஸ் இறுதியில், 447 புள்ளிகள் சரிவுடன் 16,022ல் நிலைத்தது. இது 2.7 சதவீத சரிவாகும். கடந்த பிப்ரவரி 10ம் தேதிக்குப் பிறகு இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதன்முறை.
சென்செக்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட 30 நிறுவன பங்குகளில் ஒன்று மட்டுமே ஏற்றம் கண்டது. இதன்மூலம் இந்த மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 8.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 4,807ல் நிலைபெற்றது.


                 TRADING LIVE DATA VISIT MY BLOG : http://www.tradersfirst.blogspot.com/
அம்பானி சகோதரர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம் கிடைத்தது.
அம்பானிகளுக்கிடையில் சமரசம் ஏற்பட்டதால், கடந்த திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், இந்த இரு குழும நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் இருந்தன. அதிகபட்சமாக அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் பங்கு 22.6 சதவீதம் உயர்ந்து ரூ.55 ஆனது. இதுபோல் முகேஷின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ப்ரா 11.3 சதவீதம் உயர்ந்தது. இதுதவிர, இந்த இரு குழுமங்களைச் சேர்ந்த 9 நிறுவன பங்குகளும் அதிக அளவில் உயர்ந்தால் இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி அதிகரித்தது.
‘‘அம்பானி சகோதரர்களிடையே சமரசம் ஏற்பட்டதால் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. குறிப்பாக, முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் குழும பங்குகளை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர்’’


செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடக்கத்தில் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் செல்போன் பயன்படுத்தினர். தற்போது இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. சில தனியார் நிறுவனங்கள் கூட, அலுவலகத்தில் செல்போன் பேச தடை விதித்துள்ளன.
இவற்றை மீறி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். கார், பைக், பஸ்களில் போகும்போது, சாலைகளில் நடந்து செல்லும் போது, வீட்டில் இருக்கும்போது இரவு, பகல் பாராமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர். நண்பர்கள் அருகே இருந்தால் கூட எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் செய்யும் அளவுக்கு, செல்போனுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி விட்டனர்.
சாலையில் நடக்கும்போது, வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசினால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
ரேடியோ பிரீக்வன்சி (வானொலி அலைவரிசை) மூலம் செல்போன் செயல்படுகிறது. நமது உள் காது மற்றும் மூளை பகுதியும் அதே போன்ற அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. செல்போனை காதின் அருகில் வைத்து பேசுவதால், உள் காதின் செவித்திறன் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் தொடர்ந்து பேசுபவர்களுக்கு முதலில் காதில் வலி ஏற்படும். இரைச்சல் உருவாகும், அதன்பின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். இறுதியாக காது கேட்கும் திறன் முழுமையாக நின்றுவிடும்.
செல்போனில் தொடர்ந்து பேசுவதால், வெளி காது, நடு காது, உள் காது மற்றும் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. மனநிலையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மயக்கம், தலை சுற்றல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செல்போன் பேசுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகளை இதுவரை மறுக்கவில்லை.
செல்போன் பேசுவதால் பாதிக்கப்பட்டு காது வலி, காது சரியாக கேட்கவில்லை என்று தினமும் சராசரியாக 10 பேர் ஆஸ்பிட்டல் செல்கின்றனர். இதில் இளைஞர்கள்தான் அதிகம். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். முடிந்த அளவு ஹெட்போன், புளுடூத் பயன்படுத்தி பேசலாம்.


இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும பாகிஸ்தான், அதற்கான விலையைக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களை அனைத்து நாடுகளும் தீவிரவாதியோ என சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தை விமானம் மூலம் மோதி தீவிரவாதிகள் தகர்த்த சதிச் செயலுக்குப் பிறகு, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கூடுதலாக பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கிறது. இப்போது டைம்ஸ் ஸ்கொயர் கார் வெடிகுண்டு சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானியர் மீது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து வந்து பல தலைமுறைகளாக அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டவர்கள் மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. உயர் கல்விக்கும், வேலைக்கும் அமெரிக்கா செல்வதையே விரும்பிய பாகிஸ்தான் மக்களுக்கும் அந்த ஆர்வம் குறைந்துபோய் விட்டது. விசா வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளதும், விமான நிலையங்களில் சோதனைகளை கடுமையாக்குவதும் பாகிஸ்தான் இளைஞர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விசா கிடைத்தவர்களும் கூட, தேவையில்லாமல் ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா செல்வதை தவிர்க்கின்றனர்.
அமெரிக்கா வளமான பூமி. திறமையானவர்கள் உலகில் எந¢த மூலையில் இருந்தாலும் அவர்களை இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்ளும். வாழ்க்கையில் உயர அனைத்து வாய்ப்புகளையும் அள்ளித் தெளிக்கும். அதுதான் அமெரிக்கா. இந்த வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு பாகிஸ்தானியர்களுக்கு இனி கிடைப்பது கஷ்டம்.
பாகிஸ்தான் மக்களை இந்த பரிதாபமான நிலைக்கு தள்ளிய பெருமை, அந்நாட்டு ராணுவத் தளபதிகளுக்கும் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கும்தான் போய்ச் சேரும். அவர்களின் பிள்ளைகள் அனைத்து வசதிகளுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள். உயர் வேலையில் சேர்வார்கள். அது தனிக் கதை. ஆனால் அப்பாவி மக்கள்...? பல ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் கொடுத்த மிகப்பெரிய விலை அது.



மேஷம்:

கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்:
சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சாதிக்கும் நாள்.

கன்னி:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

விருச்சிகம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு:
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்:
பெரியோர்களின் ஆசி கிட்டும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

கும்பம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


26.5.2010, 

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 12ம் நாள், புதன் கிழமை,
வளர்பிறை. திரயோதசி திதி காலை மணி 7.04 வரை; பிறகு, சதுர்த்தசி திதி. சமநோக்குள்ள சுவாதி நட்சத்திரம் மதியம் மணி 12.59 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்: காலை 9.30 to 10.30
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் நல்லகாரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ரேவதி,அஷ்வினி நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்கு வாதங்களையும்   தவிர்க்கவும்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget