விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 8ம் நாள், சனிக் கிழமை,
வளர்பிறை. நவமி திதி மதியம் மணி 2.31 வரை; பிறகு, தசமி திதி. சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பூரம் நட்சத்திரம் மாலை மணி 5.05 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திரம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00,
இரவு 9.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
பழைய வாகனம் விற்க, நண்பர்கள், உறவினர்களை சந்தித்துப் பேச நன்று.
ராகு காலம் : 9.00 to 10.30
எமகண்டம் : 1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம் : அவிட்டம் , சதயம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கடவுளை நெருங்கி விட்டானா மனிதன்? ஆம், கடவுள் மட்டுமே சில அபூர்வ செயல்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்கு நடுவே, அதேபோன்ற செயல்களை அறிவியல் பூர்வமாக சாதித்து வருவதில் விஞ்ஞானிகளின் பங்கு அதிகம்.

அந்த வகையில், பல ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில் ஒரு மகத்தான சாதனையை அமெரிக்காவை சேர்ந்த மரபணு வல்லுனர் கிரேக் வென்டர் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். மனித பிறப்பில் இருந்து வாழ்க்கையில் கடைசி வரை செயல்படுவதில் ஜீன் மற்றும் க்ரோமோசோம்களுக்கு முக்கிய  பங்கு உண்டு. பல லட்சம் செல்களை கொண்ட இவை தான் வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது.
இந்த வகையில், முதன் முதலில் செயற்கை செல் (சிந்தடிக் செல்) கண்டுபிடித்துள்ளனர் இந்த விஞ்ஞானிகள். இந்த செயற்கை செல்களால், மரபணுவை மாற்ற முடியும்; தேவைக்கேற்றபடி செயல்படுத்த முடியும். இயற்கையான செல்கள் போல, மனித உடலில் பங்காற்ற முடியும்.
இதன் பலன்கள் அளவிட முடியாது; சுருங்கச்சொன்னால், மனிதனை, அவன் வாழ்க்கையை முழு ஆரோக்கியமாக மாற்றி விட முடியும். அதாவது, செயற்கை வாழ்க்கையை உருவாக்க முடியும். இத்தனை ஆண்டுகளில் முதல் புரட்சி சாதனை இது தான். மனிதன், இயற்கை இடையே உள்ள இடைவெளியை நாங்கள் தகர்க்க இன்னும் பல மைல் செல்ல வேண்டும்’ என்கிறார் வென்டர்.
சாதனையில் இந்தியர் பங்கும் உண்டு. 24 பேர் கொண்ட வென்டர் குழுவில், சஞ்சய் வாஜி, ராதா கிருஷ்ணகுமார், பிரசாந்த் பார்மர் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி இந்தியர் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.


மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு, ஆர்தர் ரோடு சிறையில் ‘சி  7096’ என்ற எண் வழங்கப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு 5 மரண தண்டனை விதித்துள்ளது. மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த வரை, அவனுக்கு கைதிக்கான அடையாள எண் கொடுக்கப்படவில்லை. இப்போது தண்டனை அளிக்கப்பட்டு விட்டதால் அவனுக்கு அடையாள எண் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் இனிமேல் அவன், ‘கைதி எண் சி 7096’ என்று அழைக்கப்படுவான். இந்த எண்ணில்தான் அவனுடைய ஆவணங்கள் அனைத்தும் பராமரிக்கப்படும்.
சிறையில் ஏ, பி, சி என மூன்று பிரிவுகள் உள்ளன. தண்டனை அளவின் அடிப்படையில், கைதிகள் இந்த பிரிவுகளில் அடைக்கப்படுகின்றனர். 3 மாதங்களுக்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் ‘ஏ’ பிரிவிலும், 3 முதல் 5 மாதம் தண்டனை பெற்றவர்கள் ‘பி’ பிரிவிலும், கொலை குற்றவாளிகள் ‘சி’ பிரிவிலும் அடைக்கப்படுகின்றனர். கசாப் கொலை குற்றவாளி என்பதால் ‘சி’க்கு மாற்றப்பட்டு உள்ளான். இருப்பினும், அங்கும் அவனுக்கு தனி அறைதான். மற்ற கைதிகளை பார்க்க முடியாது; பேச முடியாது. கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
மரண தண்டனை கைதிகளுக்கு சிறையில் எந்த வேலையும் கொடுக்கப்படுவது கிடையாது. ஜாலியாக சாப்பிடலாம்; தூங்கலாம். ‘மூடு’ இருந்தால் புத்தகம் படிக்கலாம். கடுங்காவல் தண்டனை பெற்றவர்களுக்கு தச்சு வேலை, தோட்ட வேலை, மற்ற கைதிகளுக்கு சமைத்துப் போடுவது போன்ற வேலைகள் கொடுக்கப்படும். அதற்காக அவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகிறது. சிறையில் கசாபுக்கு உள்ளே ஒரே வேலை, அவனுடைய துணியை அவனே துவைத்துக் கொள்வதுதான். கையில் பணம் இருந்தால், சிறையில் உள்ள லாண்டரியில் போடலாம். ஆனால், அவனிடம் ஒரு பைசா கூட கிடையாது.

எல்லாம் சரிதான் கசாபை என்றைக்கு தூக்கில் போடுவார்கள்? அது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.


 பங்கு சந்தை பற்றிய LIVE DATA விற்கு விசிட் மை  ப்ளாக் www.tradersfirst.blogspot.com
பங்குச் சந்தை இப்போது அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இதனால், சிறு முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருப்பார்கள். உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கேற்றால் நமது பங்குச் சந்தையில் பெரிய சரிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.அதன்மூலம், வெளிநாட்டு சாதக, பாதக அம்சங்கள் நமது பங்குச் சந்தைகளை பெரிய அளவில் பாதிக்காமல் செய்ய முடியும். அப்படி செய்தால் முதலீட்டாளர்களின் பணத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைக்கும். பங்கு முதலீடு செய்ய சரியான நேரம் பற்றி சிறு முதலீட்டாளர்களிடம் பிரசாரம் செய்வது இதற்கு அவசியம்.
பங்கு முதலீடு பற்றி மக்களுக்கு கல்வி அளிக்க நாடு முழுவதும் முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தை தொடங்க கம்பெனி விவகாரத் துறை திட்டமிட்டுள்ளது. பெருநகரங்களில் பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் பங்குச் சந்தை பற்றி விரிவான அறிவைப் பெற்றுள்ளனர். எனவே, சிறு நகரங்கள், டவுன்களில் இந்த விழிப்புணர்வு கல்வி திட்டம் தொடங்கப்படும்.
பங்கு முதலீடு செய்யும் வழிகள், லாபம் ஈட்ட சரியான நேரம், முதலீடு செய்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி சிறு முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவை எளிதாக மக்களை சென்றடைய மாநில மொழிகளில் பிரசாரம் செய்ய திட்டமிடபட்டுள்ளது.
நமது பங்குச் சந்தைகளில் நம்நாட்டு மக்களின் முதலீடு மிகக் குறைவாக உள்ளது. வீட்டின் சேமிப்பில் 1.6 சதவீதம் மட்டுமே பங்கு முதலீடாக உள்ளது. 
எனவே பங்கு சந்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வதும்,பாதுகாப்பாக முதலீடு செய்வது பற்றியும் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு அவசியம் தேவை.
இன்றைய சூழலில் நிறைய  நகரத்து பெண்கள் வீட்டிலுருந்தபடியே பங்கு சந்தைகளில் 
முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.மேலும் பெருநகரங்களில் மாணவர்களும் கூட பகுதி நேரங்களில் பங்குசந்தைகளில் ஈடுபட்டு அவர்களின் செலவுக்கு சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால் பங்குசந்தைகளில் ஈடுபட பங்குசந்தை
பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.அரசு இதுமாதிரி விழிப்புணர்வு முகாம்களை 
நகரங்களில் மட்டுமல்லாமல்,கிராமங்களிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும். 





ஆந்திராவில் வலுவிழந்து கரை கடந்த ‘லைலா’, மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் 11,860 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் தவிக்கின்றன.

கடந்த 17ம் தேதி வங்கக் கடலில் உருவான ‘லைலா’ புயல், 3 நாள் மிரட்டலுக்குப் பிறகு ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் நேற்று முன்தினம் மாலை கரை கடந்தது.
இப்போது அது, மசூலிப்பட்டினத்துக்கு அருகே கடற்கரை ஓரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், அது மீண்டும் கடலுக்கு திரும்பி புயலாக தாக்கும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. வலுவிழந்து கரை கடந்ததால் அதன் சீற்றம் சிறிது மட்டுமே குறைந்துள்ளது.
இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் தொடர்கிறது. கிழக்கு கோதாவரி உட்பட சில மாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. 5.800 ஹெக்டேர் விவசாயப் பயிர்களும், 6060 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
பிரகாசம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும், மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, நெல்லூர் மாவட்டங்களில் ரயில், தரை மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு ள்ளன. ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் உடைந்து கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் தவிக்கின்றன. 1,500 மீனவர் படகுகள் சேதம் அடைந்துள்ளன. புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா பகுதியில் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், மணிக்கு 95 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளால் 37 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 7 பேரும், நெல்லூரில் 4 பேரும், குண்டூரில் 3 பேரும் உயிர் இழந்தனர். ஆந்திராவில் மழை வெள்ளத்துக்கு ஒரே நாளில் 37 பேர் உயிர் இழந்துள்ளனர்.


துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் மங்களூர் ஏர்போர்ட் அருகில் விபத்து 160 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது.
உயிர் இழந்தவர்களில் அதிக பேர் கர்நாடக மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். போதிய வெளிச்சமின்மை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சொல்லபடுகிறது .
       எது எப்படி ஆயினும் இதன் விலை 160 பேரின் உயிர்.
உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு வலைபூவுலக நண்பர்கள் மற்றும்
வாசகர்கள் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்து கொள்கிறோம்.
விபத்தில்  பலியான அனைத்து உயிர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
      விபத்துக்கு என்ன காரணம் சொல்லபட்டாலும்,இந்தியாவின் விமானத்துறையில்
இன்னும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இன்னும் இது மாதிரி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நவீன படுத்தப்பட வேண்டும்.
எத்தனை நாட்களுக்கு தான் நாம் இதுமாதிரி விபத்துக்களை சந்திக்க வேண்டுமோ?




 இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தை, கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும்..
ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
பாலீஷ் செய்யப்படாத அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது. இது உமி எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது. அதில் விரைவான ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை, உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற பொருள் உள்ளது. அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது. அரிசியை பாலீஷ் செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது. அதில் செறிந்துள்ள சுபாலெரோன் இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.
 பாலிஷ் செய்யப்படாத அரிசி இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்.







தினசரி உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலி உட்பட பல்வேறு தசை வலிகளை நீக்கி விடும்.

இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள்.
இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உண்டு. தவிர, உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைக்கிறது.  தினமும் உணவில்
இஞ்சியை  சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகள் 25 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உண்டு..


கடந்த 1970க்கு முன்பு வரை புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை கிடையாது. இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன. சாதாரண மக்கள், ‘ஏதோ புயல் வருகிறது; போகிறது’ என்று இருப்பார்கள். புயல்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்பட்ட பிறகுதான் பாமர மக்களும் அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதுடன், அந்த புயல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் நிலையும் உருவானது.

1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு  ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது.
புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது. கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு:
நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).
 அடுத்த புயல் பெயர் ‘பண்டு’

வடக்கு இந்தியப் பெருங்கடலில் அடுத்து எப்போது புயல் ஏற்படும் என்பது தெரியாது. ஆனால், அப்படி ஒரு புயல் உருவானால் அதற்கு வைக்கப்பட உள்ள பெயர் இப்போதே தயாராக இருக்கிறது. அதன் பெயர் ‘பண்டு’. புயலுக்கு பெயர் வைக்கும் சுழற்சியில், பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாடு பரிந்துரை செய்துள்ள பெயர்தான் ‘பண்டு.’


மேஷம்: 

பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆனால், அசுவனி நட்சத்திரக் காரர்களுக்கு வீண் செலவுகள் வந்துபோகும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்:
நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்:
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். நிம்மதியான நாள்.

சிம்மம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். மகம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

கன்னி:
குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வியா பாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.

துலாம்:
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார் கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சிறப்பான நாள்.

தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். ஆனால், மூலம் நட்சத்திரக்காரர்கள் நிதானித்து செயல்படுவது நல்லது. வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைகள் நீங்கும் நாள்.

மகரம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர் களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


21.5.2010

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 7ம் நாள், வெள்ளிக் கிழமை,
வளர்பிறை. அஷ்டமி திதி மாலை மணி 4.52 வரை; பிறகு, நவமி திதி. மரணயோகமுடைய மகம் நட்சத்திரம் மாலை மணி 6.38 வரை; பிறகு, சித்தயோகமுடைய பூரம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6&9, மதியம் 1&3, மாலை 5&6, இரவு 8&10 மணி வரை.
பொதுப் பலன்:
கடன் தீர்க்க நல்ல நாள்.
ராகுகாலம் : 10.30 - 12.00
எமகண்டம் : 3.00 - 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்ட்ம் நட்சத்திரங்கள் ( மகரம்,கும்பம் ராசிகள்)
மேறகண்ட நட்சத்திரகாரர்கள் வீண்வாக்குவாதங்களையும்,புதிய முயற்சிகளையும்
தவிர்க்கவும்.


மாவோயிஸ்ட்கள் எனப்படும் நக்சலைட்கள், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள காடுகளில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து பணம் சம்பாதிப்பவர்களையும், சாலைகள் போடும் ஒப்பந்தக்காரர்களையும் மிரட்டி ஆண்டுக்கு ரூ.1,200 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை பறிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பணத்தில் ஆயுதம் வாங்கவும், உளவு பார்க்கவும், போக்குவரத்து மற்றும் கணினி பயிற்சிக்கும் பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள்.
‘சிவப்பு புரட்சி’ என்ற பெயரில் நக்சலைட்கள் ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வசூலிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுபோல் பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் தனி நபர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள். மியான்மர், வங்கதேசத்தில் உள்ள ஆயுத சந்தைகளில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வாங்கி குவிக்கிறார்கள்.
கடந்த 2007 செப்டம்பரில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட் பீரோ உறுப்பினர் மிசிர் பெஸ்ரா என்பவர் போலீசில் பிடிபட்டார். பிடிட்ட 2 ஆண்டுகளுக்குள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது இவரது கூட்டாளிகள் இவரை தப்பிக்கச் செய்து விட்டனர். பெஸ்ரா அளித்த வாக்குமூலத்தில் பட்ஜெட் போட்டு ஒவ்வொரு விஷயத்துக்கும்  நிதி ஒதுக்கீடு செய்ததை ஒப்புக் கொண்டார்.
புரட்சி என்ற பெயரில் மிரட்டி பறிக்கும் பணத்தின் மூலம் நக்சல் இயக்கத்தின் உயர் மட்டத் தலைவர்கள் தங்களது வசதிகளை பெருக்கிக் கொள்கிறார்கள். இவர்களது பிள்ளைகள் இந்தியாவின் பெரிய நகரங்களில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை படிக்கிறார்கள்.
ஆனால், பழங்குடியின பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். பாதுகாப்பு படையினர் தங்குகிறார்கள் என்பதால் பள்ளி கட்டிடங்களை தகர்ப்பதாக காரணம் வேறு கூறிக் கொள்கிறார்கள்.
நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக குவாரிகள், கனிம சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்கிறார்கள். வனப் பகுதியில் சாலைகள் போடும் ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி குகைகளை தகர்ப்பதற்கு வெடி வைப்பது போல் சாலைகளில் வெடி வைத்து விடுகிறார்கள். 2009ல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஜார்கண்ட் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்தது.
மிரட்டி பணம் பறித்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது, சட்ட விரோதமாக சுரங்கங்கள் அமைப்பது இதுதான் புரட்சியா? மக்களே சிந்தியுங்கள்.


தமிழகத்தில் 454 பொறியியல் கல்லூரிகள்; 1.84 லட்சம் இடங்கள். மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களின் எண்ணிக்கை தான் ஆண்டுதோறும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் 30 ஆயிரம் இடங்கள் காலி. உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது.
போதுமான அளவுக்கு பொறியியல் கல்லூரிகள், கைநிறைய இடங்கள் இருந்தும் சேர முடியாமல் மாணவர்களை தடுப்பது எது? இந்த கேள்வி சமீபத்தில் சட்டசபையில் சர்ச்சையை கிளப்பியது. கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர்கள் கூட்டத்திலும் அதுவே விவாதப் பொருளானது. விளைவு, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. தகுதி மதிப்பெண் குறைக்கப்படுவதால், நிறைய பேர் தகுதி பெறுகிறார்கள். ஆறுதலான விஷயம்.
பக்கத்து மாநிலங்களில் எல்லாம் பிளஸ் 2 தேர்வில் பாஸ் செய்தாலே போதும்; பொறியியல் கல்லூரிகளில் படிக்க முடியும். தமிழகத்தில் மட்டும் நேர்மாறான நிலை. இவ்விஷயத்தில் முந்திக் கொண்ட கர்நாடகா, கேரளாவை விரட்டிப் பிடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். படிப்படியாக அந்த நிலைமை வரலாம். அதற்கு அச்சாரமாக 5 மார்க் குறைப்பு.
பொதுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக இருந்த தகுதி மதிப்பெண் 50 ஆகவும், எம்பிசி பிரிவினருக்கு 50 லிருந்து 45 ஆகவும், பிசி பிரிவுக்கு 45&40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டியினரை பொறுத்தவரையில் 35% போதும் என்ற பழைய நிலைமை நீடிக்கிறது.இந்த 5 சதவீத குறைப்பே நிறைய தரப்புக்கு ஆறுதலை தந்துள்ளது. கடந்த ஆண்டில் வீணாய் போன 30 ஆயிரம் இடங்களில், 20 ஆயிரம் பேருக்காவது இவ்வாண்டில் இடம் கிடைக்கலாம். அதற்கு 5 சதவீத குறைப்பு உதவும் என எதிர்பார்க்கலாம்.
உயர் கல்வி படிக்கும் எண்ணம் குறைய இதுபோன்ற தடைகள்தான் காரணம் என்பது கல்வியாளர்கள் கணிப்பு. அறிவியல், கணிதத்தில் அதிக தேர்ச்சியும் அறிவும் பெற்றிருந்தவர்கள் கூட, மற்ற பாடங்களில் சறுக்கியதால் தகுதி இழந்தவர்களாகி விடுகிறார்கள். அதாவது வெறும் 5 சதவீதத்தில் உயர்கல்வி வாய்ப்பை இழந்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்கள். காலி இடங்களுடன் கல்லூரிகள் காத்துக் கிடக்க வேண்டியதாகி விடுகிறது. அந்த நிலைமை இனி மாறலாம்.


சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம்.அன்றாடம்செய்யும்  ஒவ்வொரு செயலுக்கும்  
ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64 லில் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்:
புருவங்களுக்கு மத்தியில் : நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் : தனயோகம்
வலது புருவம் : மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) : திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் : நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் : புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் : ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் : சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் : நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் : கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி : ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் : அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) : செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் : வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் : ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி : சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி : தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே : பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை : திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் : சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு :ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு : பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு : பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு : திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் : அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்:
நெற்றி நடுவே : புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் : தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் : அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் : செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் : கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி : வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் : ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி : அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் : வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் : படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து : பிள்ளைகளால் யோகம்
நாக்கு : வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் : கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் : சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை : பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் : யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் : மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் : ஆடம்பரம், படாடோபம்
வயிறு : நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு : ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை: தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை: ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் : சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை
உங்களுக்கு எங்கே மச்சம் தேட ஆரம்பியுங்கள்.  அன்பு நண்பன்:S .சேது ராமன்.


பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் 5.9 அடி அங்குல லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது 16ம் நூற்றாண்டு காலத்தில் உள்ளது என தெரிகிறது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பொக்லைன் இயந்திரத்தால் மணல் அள்ளும் பணி நடந்தது. 15 அடி ஆழத்துக்கு கீழே தோண்டியபோது ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டது.
இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் மண்வெட்டியால் சத்தம் வந்த இடத்தை தோண்டினர். அப்போது லிங்கம் புதைந்திருந்தது தெரிய வந்தது.
 பாலாற்றில் புதைந்திருந்த லிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. பாலாற்றில் கிடைத்தது சிவலிங்கத்தின் ருத்ரபாகம், விஷ்ணுபாகம் ஆவுடையார் கிடைக்கவில்லை. ருத்ரபாகம் தொடங்கி பிரம்மபாகம் வரை லிங்க தண்டின் உயரம் 5 அடி 9 அங்குலம் இருந்தது. இது 16ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு காலத்தில் வேலூர் நாயக்கர்கள் காலத்தில் ஏதாவது கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலப்போக்கில் படையெடுப்புகளின்போது ஆற்றில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget