‘கிரீன் எக்ஸர்சைஸ்’ எனப்படும் பசுமையான பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் நலம், மன நலம் மேம்பட்டு ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க ரசாயன சங்கத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை வருமாறு:
வயது, பாலினம், மனநலம் ஆகிய வித்தியாசமின்றி 1,252 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை இயற்கையான சூழ்நிலையில் பல்வேறு உடல் பயிற்சிகள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர்.
நடைப் பயிற்சி, தோட்ட வேலை, சைக்கிளிங், மீன்பிடித்தல், படகு சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றுடன் விவசாய வேலையிலும் 1,252 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகு அத்தனை பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.
அதில் இளைஞர்கள், மனநலம் பாதித்தவர்களில் பெரும்பாலோருக்கு அதிக நன்மை கிடைத்தது தெரிய வந்தது. மற்றவர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டிருந்தது.
விளைநிலம், பூங்கா உட்பட இயற்கைச் சூழலில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோருக்கு உடல் மட்டுமின்றி மனநலமும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
நகரங்களில் உள்ள பூங்காக்களும் இதில் அடக்கம். தோட்டங்கள், பூங்காக்களில் நீர் தெளித்தோ, நீர்த் தொட்டிகள், குளங்கள் இருந்தால் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும் என்கிறது ஆய்வு.
இதுபற்றி இயற்கை நிபுணர் ஜூல்ஸ் பிரெட்டி கூறியதாவது:
வீட்டுத் தோட்டத்திலோ, பூங்காவிலோ 5 நிமிட உடற்பயிற்சி செய்வது அபார பலன் தரும். உடல் நலம், மனநிலையை சிறப்பாக்குவதுடன் தன்னம்பிக்கையும் உயரும். மனஅழுத்தம், விரக்தி ஆகியவை சிறிது நேரம் மறைந்தாலே, நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்றார்.


த்தரி வெயில் இன்று தொடங்குகிறது. சென்னைக்கு வெளியே இருப்பவர்களுக்கு அக்னி நட்சத்திரம். 28ம் தேதி வரை தொடரும். அதுவரை அதிகபட்ச வெப்பமும் அனல் காற்றும் வாட்டியெடுக்கும். ஆண்டு தோறும் மே மாதம் கத்தரி வந்து போவது வழக்கம்தான். என்றாலும், ‘போன வருஷத்தைவிட இந்த முறை வெயில் தாங்க முடியவில்லை’ என்று மக்கள் புலம்புவது வேடிக்கையான வாடிக்கை.
ஃபேன், ஏர்கூலர், ஏர்கண்டிஷனர்கள் முழுவீச்சில் இயங்குவதால் இந்த மாதம் மின்சாரத்தின் தேவை உச்சத்தை எட்டுகிறது. இதையடுத்து மின்தடையும் வோல்டேஜ் ஊசலாட்டமும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. உலகம் வெப்பமயம் ஆவதை தடுக்க ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று பிரசாரம் நடக்கும்போதே, இப்படி மின் உபயோகத்தை உச்சத்துக்கு தள்ளுவது பெரிய முரண்பாடு.
சின்னச் சின்ன வழிகளில் உடல் உஷ்ணத்தையும் உலக வெப்பத்தையும் குறைக்க முடியும் என்பது பலருக்கு தெரியாது. மும்பையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் நூறு பேர் இது பற்றி பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு டை கட்டுவதில்லை என்ற முடிவு. ‘டை கட்டினால் சட்டைக்குள் வெப்பம் அதிகமாகிறது. டை இல்லை என்றால் அந்த அளவு சூடு தெரிவதில்லை. இதனால், அலுவலகத்திலும் வீட்டிலும் ஏர்கண்டிஷனரை அதிக குளிர் நிலைக்கு திருப்பாமல் மின்சாரத்தை சேமிக்க முடியும்; வெளியாகும் கார்பன் அளவையும் குறைக்கலாம்’ என அவர்கள் கூறுகின்றனர். இந்த கருத்துக்கு ஆதரவு பெருகுகிறது.
மும்பை நகரம் தினமும் பயன்படுத்தும் மின்சாரம் மூவாயிரம் மெகாவாட். அதில் மூன்றில் ஒரு பங்கை ஏசி மெஷின்கள் சாப்பிடுகின்றன. டை கட்டவில்லை என்றால் 18 டிகிரி செல்சியசுக்கு ஏசி ரெகுலேட்டரை திருப்ப அவசியம் வராது. இது மும்பைக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய நல்ல ஏற்பாடு. சென்னையை எடுத்துக் கொண்டால், சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிக்கு கீழே இறங்குவதில்லை. எனவே ஏசியை அதற்கு மேல் வைத்தால் போதும். அதை மட்டும் செய்தாலே 20 சதவீத மின்சாரம் மிச்சமாகும். முழுக்கை சட்டை, ஷூ ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுத்து வெள்ளை நிற காட்டன் சட்டை அணிந்தால் இன்னும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மும்பை தாக்குதல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ‘இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, மனித படுகொலையில் ஈடுபட்டது உட்பட 86 குற்றச்சாட்டுகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி’ என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், உள்ளிட்ட பத்து இடங்களில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், 195 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் 3 நாட்கள் இடைவிடாமல் நடந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முகமது அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான்.
பின்னர், பல கோடி ரூபாய் செலவில் சிறப்பு பாதுகாப்புகள் செய்யப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் தனி அறையில் அவன் அடைக்கப்பட்டான். மேலும், தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த பாஹிம் அன்சாரி, சகாபுதீன் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டனர்.
கசாபின் பாதுகாப்பு கருதி, ஆர்தர் ரோடு சிறை வளாகத்திலேயே சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி விசாரணை தொடங்கியது. மொத்தம் 653 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி விசாரணை முடிந்தது. அப்போது, மே 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். அதன்படி நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்தர் ரோடு சிறை முன்பாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த தீர்ப்பை அறிய இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பு எப்படி அமையும் என்பது பற்றி மும்பை மக்கள் காலை முதலே பரபரப்பாக விவாதிக்க தொடங்கி விட்டனர்.பகல் 11 மணிக்கு மேல் கசாப், அன்சாரி, சகாபுதீன் ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். மதியம் 2 மணிக்கு மேல் நீதிபதி தகில்யானி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
                                            தண்டனை இன்று அறிவிப்பு


வால் பையன் கமெண்ட் : இந்த சம்பவம் நடந்து ஒராண்டுக்கு மேல் ஆகி விட்டது.
கசாப் துப்பாக்கியால் அப்பாவி மக்களை சுட்டு தள்ளியதை உலகமே டிவியில் பார்த்தது. ஆனால் அவன் குற்றவாளி என்று சொல்லவே நமக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.இன்னும் தண்டனை அறிவித்து அதை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? இது தான் ஜனநாயகமா?


கார்குண்டு மூலம் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க சதி செய்ததற்கு பாகிஸ்தான் தலிபான் காரணமா என அமெரிக்கா புலனாய்வுத்துறையினர் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகே நேற்று முன்தினம் மாலை ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரிலிருந்து திடீரென புகை எழுந்தது. இதனால் அந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி கிளம்பியது. அந்த இடத்தை தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சுற்றிவளைத்தனர். அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பீதியை கிளப்பியது.
ரோபோ மூலம் மர்ம காரை சோதனையிட்ட போலீசார் அதில் வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்தனர். அதில் மூன்று புரோபேன் டேங்குகளும், இரண்டு கேஸ் கன்டெய்னர்களும், வெடி பொருட்கள் மற்றும் வயர்களுடன் கூடிய கடிகாரங்களும் இருந்தன. இது வீட்டில் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த குண்டாக இருக்கும் என கருதப்படுகிறது. பின் அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு செயல் இழக்கச் செய்த குழுவினரை அதிபர் ஒபாமா பாராட்டினார். இந்த சதி செயலுக்கு யார் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தெக்ரிக்&இ&தலிபான் என்ற அமைப்பு, நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக இன்டர்நெட் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இந்த வீடியே ‘யு ட்யூப்’ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘‘அமெரிக்காவில் இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்டதற்கு வாழ்த்துக்கள். இச் சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் பொறுப்பேற்கிறது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேசிய தெக்ரிக்&இ&தலிபான் அதிகாரி குவாரி உசேன் மெக்சூத் என்பவர், ‘‘ஈராக்கில் அல்&கய்தா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்களான அபு உமர் மற்றும் அயுப் அல் மஸ்ரி ஆகியோர் கடந்த மாதம் கொல்லப்பட்டதற்கும், பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கும் பழிவாங்கும் விதத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. எனவே, இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என அமெரிக்க புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவை கண்காணித்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை கார் குண்டு மூலம் தகர்க்க தீவிரவாதிகள் சதி செய்தது பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாமல் போய்விட்டது. வெடிகுண்டு இருந்த காரில் இருந்து புகை வெளியான பின்பு, உடனடியாக சுதாரித்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்துள்ளனர்.


குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நசீம். 12ம் வகுப்பு மாணவியான இவர் ரயிலில் கழிவுகள் அகற்றும் கருவி, நெருப்பின்றி சீல் வைக்கும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்ததின் மூலம் தேசிய அளவில் பிரபலம் அடைந்தார்.

பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி பல்கலைக்கழகம் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளை பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்தநிலையில் கல்வி, விளையாட்டு, அறிவியல், கலைகளில் சிறந்துவிளங்கும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து தங்களது நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை ஜப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த 10 நாட்கள் கல்வி சுற்றுலாவுக்கு செல்ல மாஷா நசீம் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ள இந்த சுற்றுலாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாண வர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் கங்கணப்பள்ளி பகுதியில் நீவா நதிக்கரையோரம் மலையடிவாரம் உள்ளது. இங்கு பூமிக்கடியில் இருந்து நேற்று திடீரென சாம்பல், மண் துகள்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் அருகே சென்று பார்த்தனர். அது வெப்ப வாயு என தெரிந்தது. அந்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த இடத்தில் மூங்கில் குச்சியால் பொதுமக்கள் கிளறினர். அப்போது பயங்கர சத்தத்துடன் மீண்டும் புகை கிளம்பியது. இதைக்கண்ட பொதுமக்கள் பூகம்பம் ஏற்படுமோ என பீதியடைந்து அலறியடித்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அந்த இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடைத்தனர். ஆனாலும் அந்த வெப்ப வாயு நிற்கவில்லை.
பின்னர் தீயணைப்பு படையினர் சித்தூர் முதலாவது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு, கலெக்டருக்கு தெரிவித்தனர். உடனே கலெக்டர் சேஷாத்ரி அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதன்படி சித்தூர் கோட்டாட்சியர் சுப்பிரமணியேஸ்வர ரெட்டி, மாவட்ட விநியோக அலுவலர் சந்திரமவுளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியரும், நில ஆராய்ச்சியாளருமான ஹனுமந்தா வரவழைக்கப்பட்டார். அவர் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இந்த இடங்களில் சில ரசாயன தொழிற்சாலைகள் இருப்பதால் நிலத்திலிருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கடியிலிருந்து காற்று வெளிவருகிறது. இதனால் பீதி அடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.


கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது.

கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.
கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.
அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.
தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.
பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.


மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.

இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு வருவதுதான் இந்த நோமொபோபியா.
நோ மொபைல் போபியா என்பதன் சுருக்கம்தான் நோமொபோபியா. மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இது வரும். மொபைல் போன்களை பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு இந்த மன வியாதி இருக்கிறதாம்.
மொபைல் போன்களோடு ஒட்டி உறவாடி வருவோருக்கு மட்டுமே இது வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது பேசும் நேரம் ஸ்டாக் இல்லாவிட்டாலோ அல்லது சாதனம் செயலிழந்து விட்டாலோ பெரும் மன அழுத்தம் ஏற்படுமாம். அதைத்தான் நோமொபோபியா என்கிறார்கள்.
மொபைல் போன் இல்லாமல் இவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாம். ஏற்கனவே உள்ள பல்வேறு வகையான மன அழுத்தங்களை விட இந்த நோமொபோபியா பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாக்ஸ் மில்ஸ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆண், பெண்களிடம் (அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள்) கருத்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஆண்களில் 58 சதவீதம் பேரும், பெண்களில் 48 சதவீதம் பேரும் போனில்சார்ஜ் தீர்ந்து விட்டாலோ, சாதனம் செயல்படாமல் இருந்தாலோ அல்லது பேசும் நேரம் (டாக் டைம்) குறைவாக இருந்தாலோ பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் தவித்துப் போய் விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்தாய்வில் கலந்து கொண்டவர்ளில் மூன்றில் இரண்டு மடங்கு பேர், எப்போதும் மொபைல் போனில் பேசியபடியே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது காதும், போனுமாகவே இருப்பவர்கள் இவர்கள்.
இத்தகைய பதட்டத்தைக் குறைக்க, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க, மன உளைச்சலைப் போக்க ஒரே வழி சாதனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும் சார்ஜில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். டாக் டைம் அதிகம் இருக்கும்படி அதை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மில்ஸ்.


 இந்தியாவின் 50 சதவிகித மக்கள் மொபைல் பயன்படுத்துபவர்களாக மாறியுள்ளனர். இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமான கடந்த 15 ஆண்டுகாலத்தில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 600 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு முதன் முதலில் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த 2010 மே மாதத்துக்குள் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 558.9 மில்லியனாக இருக்கும் என்று கடந்த ஆண்டு கணிக்கப்பட்டது.
ஆனால் குறித்த காலத்துக்கு முன்பே எதிர்ப்பார்த்ததை விட அதிகம்பேர் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர்.
2014-க்குள் இந்த எண்ணிக்கை ஒரு பில்லியன், அதாவது 100 கோடியைத் தாண்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
3 ஜி தொழில்நுட்பம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், மேலும் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது


1.30 PM  - TRADERS ALERT BEAR IS ரெடி

1.45 pm - nifty support 5227-5180-5152-
resistance 5250-5280-5304

we will expect some more correction in this week

2.00PM - : நம்மில் பலருக்கு நாம் யாருடன் வணிகம் செய்கிறோம்,அவர்களின் பலம் என்ன? என்பதை பற்றி எதுவும் தெரிவதில்லை.

 நாம் வணிகம் செய்வது அந்நிய முதலீட்டாளர்கள்(FII)மற்றும் உள்நாட்டு பெரும் முதலீட்டாளர்களுடன்(DII) தான் அவர்களின் மிகப்பெரிய பலமே அவர்களிடம் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு தான்.ஆனால் நம்மிடம் உள்ள சில ஆயிரம் ரூபாய்களை வைத்துக்கொண்டு அவர்களுடன் வியாபாரம் செய்து லாபமீட்ட வேண்டுமானால் நாம் அதற்கு எவ்வளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
என்பதை யோசித்துப்பாருங்கள்.
 நம்முடைய சிறு முதலீட்டிற்கே நாம் பெரிய லாபத்தை எதிர் பார்க்கும்போது அவர்களுடைய பெரிய முதலீட்டிற்கு மிகச்சிறிய லாபத்தை பெறவேண்டுமானாலும் கூட நம்மில் பலர் நடுத்தெருவிற்கு போக வேண்டி இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
நம்மை அவர்கள் ஒரே நாளில் முழுவதும் நஷ்டப்படுத்தாமல் சிறிது சிறிதாக நஷ்டப்படுத்துவதற்கு காரணம் ஒரே நாளில் நஷ்டப்படுத்தினால் நாம் பயந்து மீண்டும் இந்த பங்கு வணிகத்திற்கே வர மாட்டோம்
 மேலும் நமக்கு தெரிந்தவர்களை வரவும் விட மாட்டோம்

2.05 PM - ஆகவே தான் நமக்கு லாபம் தருவதைப்போல ஒரு போலியான நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தி நம்மை சந்தைக்குள் வரவழைத்து,தொடர்ந்து இருக்க செய்து அவர்கள் லாபம் ஈட்டுகின்றனர்

 இது புரியாமல் ஒரு நாள் லாபம் பார்த்து விட்டால்,உடனே நம் கற்பனை குதிரை மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதித்தால் ஒரு மாதத்திற்கு இவ்வளவு,ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்று மனக்கணக்கு போட ஆரம்பித்து விடுகிறோம்.
ஒருவருடைய நஷ்டம் தான் மற்றவருடைய லாபம்
பங்குச்சந்தை வணிகத்தில் தொலைக்கப்படுவது நம் பணத்தை மட்டுமல்ல,நம் நேரத்தை ,நம் எதிர் காலத்தை,நம் குடும்பத்தின் எதிர்காலத்தை மொத்தத்தில் நம் நிம்மதியான வாழ்க்கையை.தொலைக்கும் போது ஏனோ நமக்கு இது புரிவதில்லை. தொலைத்த பின்பு அதை திரும்பப்பெரும் வழியும் தெரிவதில்லை.
நம் தோல்விக்கான காரணத்தில்தான் நம் வெற்றியின் ரகசியம் புதைந்துள்ளது

பங்குசந்தையில் வெற்றி, தோல்வி என்று சொல்லுவதை விட சரி, தவறு என்றே சொல்லலாம். தவறு செய்யாதீர்கள்

2.50 PM -NIFTY 5211, 5202 BROKEN NEXT LEVEL 5180


2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையைத் தொட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தொடர் பொருளாதார சீர்குலைவு, இதனால் நூற்றுக்கணக்கான வங்கிகள் திவால் ஆனது என பெரும் சரிவைச் சந்தித்து வந்த அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியிருப்பது அமெரிக்க பொருளாதார நிபுணர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது


அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடுவது நல்லது இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாட்களுக்கு தொடர்ந்து பழம் மட்டுமே சாப்பிட்டால் உடல் ஜொலிக்கும் என்கின்றனர்.

சாப்பிடுவதற்கு முன்பு பழம் சாப்பிடுவது நல்லதா? அல்லது சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லதா என லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் விவரம்:
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில் தெரியவந்தது.
‘தர்பூசணி சாப்பிட்டால் வாந்தி வருகிறது’, துரியன் பழம் சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது’, ‘வாழைப்பழம் சாப்பிட்டால் டாய்லெட் போக வேண்டும் என தோன்றுகிறது’ இப்படி பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். உணவு சாப்பிட்ட பிறகு, இந்த பழங்களை சாப்பிடுவதால்தான் இந்த நிலை. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இந்த பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால், ஆயுள் கூடும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆற்றல், மகிழ்ச்சி கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது. பழ ஜூஸ் குடிப்பதாக இருந்தால் பிரஷ்ஷாக குடியுங்கள். புட்டியில் அடைக்கப்பட்டது வேண்டாம். மெதுவாக உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். வேகவைத்த பழத்தையும் தவிர்க்கலாம். இதில் சத்து போய்விடும். எனினும், ஜூசாக குடிப்பதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மற்ற உணவுகளை தவிர்த்து பழங்கள், ஜூஸ் மட்டுமே சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் சுத்தமாகும். இதனால், முகம், கை, கால் என அனைத்து பகுதிகளும் பளபளப்புடன் ஜொலிக்கும் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதம் அடித்த ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலக கோப்பை டி20 தொடரின் சி பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா & தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாசில் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பந்து வீசியது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. உடல்நிலை சரியில்லாத நிலையில் கம்பீருக்கு பதில் தினேஷ் கார்த்திக்கும் ஜாகீர்கானுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவும் சேர்க்கப்பட்டனர்.
விஜய் & கார்த்திக் ஜோடி களமிறங்கியது. கிளெய்ன்வெல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் விஜய் டக் அவுட் ஆனார். தடுமாற்றத்துடன் விளையாடிய கார்த்திக் 16 ரன் (2 பவுண்டரி) எடுத்து காலிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன் எடுத்து திணறிய நிலையில், அனுபவ வீரர்கள் ரெய்னா & யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடி அசத்தியது. குறிப்பாக, ரெய்னா டாப் கியரில் எகிற, நாலாபுறமும் பந்து பறந்தது. பின்னர் யுவராஜும் சேர்ந்து கொண்டார். 13.1 ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது. யுவராஜ் 37 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கிளெய்ன்வெல்ட் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்தது. சிக்சருடன் கணக்கை துவக்கிய யூசுப் பதான் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா சாதனை சதம்:
கடைசி 4 ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய ரெய்னா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். உலக கோப்பை டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 101 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து அல்பி மார்கெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. டோனி 16 (1 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்பஜன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவரில் இந்தியா 75 ரன் குவித்தது.
வெற்றிக்கு 187 ரன் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. பாஸ்மேன் 8 ரன் எடுத்து யூசுப் பதான் பந்தில் ஆட்டமிழந்தார். காலிஸ் & ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஸ்மித் 36 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆனார். காலிஸ் 73 (54 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து சாவ்லா பந்தில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி வரை போராடிய வில்லியர்ஸ் 31 ரன்னில் வெளியேற தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியது. தென்ஆப்ரிக்கா தனது 2வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை (மே 5) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஏற்கனவே AFKANISTHANAI இந்தியா வென்றுள்ளத்தால் சூப்பர்-8  சுற்றுக்கு தகுதி பெற்றுளளது


சித்த
வைத்தியத்தின் மூலம் எச்ஐவி, எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்று பல பரம்பரை மருத்துவர்கள், பட்டம் பெற்ற மருத்துவர்கள் அவ்வப்போது சொல்லி வருகின்றனர். ஆங்கில மருத்துவமான அலோபதி படித்த டாக்டர்கள் சிலரும் இதனை ஆதரிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் மருத்துவமனையில் எச்ஐவி, எய்ட்ஸ் இருந்தவர்களுக்கு ஆங்கில மருந்துடன், சித்த மருந்துகளும் கொடுக்கப்பட்டன. ஏப்பு நோய் என்று அந்தக் காலத்திலேயே இருந்ததாகவும், எனவே எய்ட்ஸ்க்கு சித்த வைத்தியத்தில் மருந்துகள் இருக்கின்றன என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எய்ட்ஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து இருப்பதாக விளம்பரம் செய்தால், அது சட்டப்படி குற்றம் என்பது மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை.
எச்ஐவி உள்ளவர்களுக்கு எம்டிஆர்&டிபி (மல்டி டிரக் ரெசிஸ்டென்ட் & டிபி) காசநோய்க்கு ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் இருக்கின்றன என்கின்றனர். இணைய தளத்திலும் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. அலோபதி மருத்துவர்கள மறுக்கின்றனர். சித்த மருத்துவர்களை கேட்டால், ‘அலோபதி மருத்துவம் மட்டுமே சிறந்தது என்ற மனநிலை பலரிடம் உள்ளது. அதுமட்டுமல்ல வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகளின் வியாபாரத்திற்காக இந்திய மருத்துவ முறைகளுக்கு தடை போடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.
783 எச்ஐவி மையங்கள்
20 லட்சம் சோதனைகள்
தமிழகத்தில்தான்
783 பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 20 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இம்மையங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் செயல்படுகின்றன.
தமிழகம்
முழுவதும் 106 பால்வினை நோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. 37 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 44,126 பேர் இவற்றில் பதிவு செய்துள்ளனர். அதில் 41,700 நபர்கள் தொடர்ந்து மருந்துகள் பெற்று வருகின்றனர். இம்மருந்துகள், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
என்ஜிஓக்கள்
மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மூலமாக 38 மையங்கள் (பெண்களுக்கென 5 மையம் உள்பட) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 84 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில்
39 சமூக நல மையங்கள் உள்ளன. இங்கு எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இலவச சிகிச்சை பெற வசதிகள் உள்ளன. இதன்மூலம் ஒரு நாளைக்கு 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில்
முதன்முறையாக எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை, முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1295 குழந்தைகளுக்கு ரூ.44 லட்சம் செலவில் உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர்
சுயஉதவிக் குழுக்கள் மூலம் எச்ஐவி விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 12 மாவட்டங்களில் 13 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயிற்சி பெற்றுள்ளனர்.
எய்ட்ஸ்
விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக செஞ்சுருள் சங்கம் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது 14 பல்கலைக்கழகங்களில் 1007 கல்லூரிகளில் இச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 57 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தியாவில் முதன் முதலாக (1986ல்) தமிழகத்தில் தான் எச்ஐவி இருப்பவர் கண்டுபிடிக்கப்பட்டார். முதன் முதலில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தொடங்கப்பட்டதும் தமிழகத்தில்தான். நாட்டில் அதிகமாக எச்ஐவி பரிசோதனை மையங்கள் (783) தொடங்கப்பட்டதும் நமது மாநிலத்தில்தான்.
எய்ட்ஸ் விஷயத்தில் இப்படி சில சிறப்புகளை பெற்றுள்ள தமிழகத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் எப்படி நடக்கின்றன? எங்கிருந்தோ வரும் கோடிக்கணக்கான நிதி முறையாக செலவிடப்படுகிறதா? மர்மம் நிறைந்த இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (டான்சாக்ஸ்) அளித்த பதில் இதோ...
மாநிலம் முழுவதும் 55 தொண்டு நிறுவனங்களை (என்ஜிஓ) தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை டான்சாக்ஸ் செயல்படுத்தி வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கை யாளர்கள், போதை ஊசி பரிமாறிக் கொள்பவர்கள், அரவாணிகள், வேலைக்காக இடம் பெயர்பவர்கள், லாரி ஓட்டுனர்கள் மத்தியில் எச்ஐவி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியை இந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
பரவலாக்க முறை மூலமும், மாவட்ட நிர்வாகங்களின் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் வகுத்துள்ள வரையறைப்படி, தேர்வுக்குழு மூலம் வெளிப்படையாக தேர்வு செய்யப் படுகின்றன.
தேர்வு செய்யப்படும் என்ஜிஓக்களின் பணிகள், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்படுகிறது. செயல்பாடு குறைந்தால், தேர்வு ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட நிறுவனமாக அறிவிக்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அரசு வழங்கும் நிதி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தணிக்கை செய்யப்படும். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், மறுநிதி வழங்கப்பட மாட்டாது.
அனைத்து நிதியையும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்குகிறது. எய்ட்ஸ் பணிக்கு தேவையான நிதியை பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. அது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.75 கோடி தரப் படுகிறது.
இந்த நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு செய்கிறது. உலக வங்கி மற்றும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
எண்ணிக்கை குறைய நிதி
எச்ஐவி,
எய்ட்ஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறையவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும், அதற்கான ஆராய்ச்சிகள் செய்யவும் உலக வங்கி உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனங்களான யுஎஸ்எய்ட், கிளிண்டன் அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை முக்கியமானவை. எச்ஐவி, எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், சிகிச்சைக்காகவும் இந்நிதியை பயன்படுத்துகின்றனர். மொத்த நிதியில் 75 சதவீதம், விழிப்புணர்வு உள்ளிட்ட தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தப் படுகின்றன. எஞ்சிய 25 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், சிகிச்சைக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
வருவது தெரியும்; போவது மர்மம்!
கோடி கோடியாய்...
புறக்கணிப்புகளால் நிகழும் தற்கொலைகள்
சமூகத்தாலும்,
மருத்துவத் துறையினராலும் நடத்தப்படும் புறக்கணிப்பு களால் எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகள் தற்கொலை செய்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த தற்கொலைகள் சில நேரங்களில் மருத்துவமனைகளிலும் நிகழுகின்றன. இதனை வயிற்றுவலி, எச்ஐவி கண்டுபிடிக்கப்பட்டதால் மனமுடைந்த தற்கொலை என்று சாதரணமாக முடித்து விடுகின்றனர். குடும்பத்தினரும் பெரிதுபடுத்துவதில்லை.
அதேபோல் சிறைக் கைதிகள் யாருக்காவது எச்ஐவி, எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால் அதை பரபரப்பு செய்தியாக்கி பலர் குளிர் காய்கின்றனர். நோய் குறித்து சரியான புரிதல் இல்லாததால் சம்பந்தப்பட்டவரும், அவர் குடும்பத்தினரும் அவமானப்பட நேரிடுகிறது.
திண்டுக்கல்லை சேர்ந்த எச்ஐவி நோயாளி ஒருவர் கூறுகையில், ‘‘புற்றுநோய், சர்க்கரை நோய் என ஏதாவது நோய் இருந்தால், அதை வெளியில் சொல்ல தயங்குவதில்லை. பத்திரிகைகளும் பரபரப்பாக்குவதில்லை. ஆனால் எச்ஐவி, எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால் பத்திரிகைகள், முகம் தெரியாத, ஊர் அறியாதவராக இருந்தாலும் செய்தியாக்கி விடுகின்றனர். மற்ற நோய்களை போல் இதையும் ஒரு நோயாக கருதினால், நாங்கள் அவமானப்படுவது குறையும். வெளியில் சொல்ல தயக்கம் இருக்காது. மக்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும்’’ என்றார்.
கிராம
மக்களுக்கும், குப்பங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுவதுண்டு. இந்தக் கூட்டங்கள், அந்த ஏழை எளிய மக்கள் எட்டிப் பார்க்க முடியாத நட்சத்திர ஓட்டல்களில் ஏசி அரங்குகளில்தான் நடக்கும். ஊர் ஊராக, குப்பம் குப்பமாக போய் நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையெல்லாம் புள்ளிராஜவும், தில்லுதுரயும் பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது ஒரு குக்கிராமத்தில் போய் ‘எய்ட்ஸ்’ குறித்து கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனாலும் தொண்டு நிறுவனங்களும், சங்கங்களும் இன்னும் ஏசி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
எல்லாம் ஏசி ஓட்டலில்தான்...
யாருக்கு அதிக பங்கு?
எச்ஐவி
உள்ளவர்களுக்காக மற்றவர்கள் நடத்தும் சங்கங்களில் வருவாய்க்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றால், எச்ஐவி உள்ளவர்கள் நடத்தும் சங்கங்களிலும் இதே நிலைமைதான். காரணம் மட்டும் வேறு. தொண்டு நிறுவனங்களில் யாராவது ஒருத்தர்தான் உரிமையாளராக இருப்பார். இந்த சங்கங்களில் நிர்வாகிகளுக்கு இடையில் இருக்கும் ஜனநாயகம் அடிக்கடி சண்டையாக மாறி விடுகிறது. சென்னையில் உள்ள எச்ஐவி உள்ளோருக்கான சங்கம் ஒன்றில் யாருக்கு அதிக பங்கு என்பதில் அடிதடி நடந்துக் கொண்டிருக்கிறதாம். பிரச்னை விரைவில் வெடிக்கலாம் என்கிறார்கள்.
எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாக மத்திய, மாநில சுகாதாரத் துறைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் சுமார் 25 லட்சம் பேர் எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளவர்கள். இதில் 2.5 லட்சம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது 10 சதவீதம் பேர் நமது ஊர்க்காரர்கள். இது இந்த ஆண்டு தொடக்கத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தெரிவித்த தகவல்.


 மெக்சிகோ வளைகுடாவில் கரையில் இருந்து 48 மைல் தூரத்தில் கடலுக்குள் இருக்கும் எண்ணெய் கிணறு வெடித்து சிதறிய விபத்தால் கடல் பகுதியில் எண்ணெய் படலம் படுவேகமாக பரவி வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வாகனங்களின் இயக்கத்துக்காக இரவும் பகலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தரையில் மட்டுமல்லாது கடல் பகுதியிலும் எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ளனர். அப்படி அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறு, கடந்த மாதம் 22ம்தேதி வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாயினர். அன்று முதல் இன்று வரை அந்த கிணற்றில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் கடலில் பரவி வருகிறது. செயற்கைக்கோள் மூலம் எடுத்த படத்தில் 130 மைல் நீளம், 70 மைல் அகலத்துக்கு எண்ணெய் படலம் மிதப்பது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் கிணறு தினமும் 5 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை கடலில் கொட்டி வருகிறது. எண்ணெய் படலத்தை மேலும் பரவாமல் தடுக்க 2.17 லட்சம் அடி நீளத்துக்கு கடலின் மேற்பரப்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எண்ணெய் கிணறு விபத்து நடந்தவுடனேயே, கடல் பகுதியில் திட்டமிட்டுள்ள அனைத்து எண்ணெய் கிணறு திட்டங்களையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள் மட்டுமே இனி இயங்க முடியும். அதோடு, பரவி வரும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்கான செலவு முழுவதையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் இதுபோல் விபத்து நடந்து, எண்ணெய் படலம் பரவும்போது, அரசு செலவிலேயே அதை அகற்றும் பணி நடந்து வந்துள்ளது. இப்போதுதான் கம்பெனியே செலவை ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget